அழகிப் போட்டியில் இணைந்தது வயிற்றிலுள்ள குழந்தை!
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்னும் பிறக்காத, தனது வயிற்றில் வளரும் குழந்தையை குழந்தைகளுக்கான அழகிப் போட்டியாளர்களில் ஒருவராக சேர்த்துள்ளார்.
26 வயதான ஜென்னி ஒலிவர் எனும் இப்பெண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.எதிர்வரும் ஜூலை மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள குழந்தைகளுக்கான அழகிப் போட்டியில் தனது வயிற்றில் வளரும் குழந்தையையும் போட்டியாளர்களுக்கான பட்டியலில் இணைத்துள்ளார் ஜென்னி.
இக்குழந்தைக்கு எல்லா என பெயரிடவுள்ளதாக அவர் கூறுகிறர்ர. ஜென்னிக்கு ஏற்கெனவே 10 வயதான மகளும் 7 வயதான மகளும் உள்ளனர். மூத்த மகளான ஜெஸிகா ஏற்கெனவே சிறுமிகளுக்கான அழகிப் போட்டிகளில் பங்குபற்றியவர்.
இந்நிலையில் தனது நடனத் திறமையும், ஜெஸிகாவின் அழகிப் போட்டி அனுபவமும் தனது இரண்டாவது மகள் அழகிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு கைகொடுக்கும் என தான் நம்புவதாக ஜெஸிகா ஒலிவர் கூறுகிறார்.
0 comments :
Post a Comment