Friday, May 31, 2013

ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா? சுமந்திரன் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டாராம் மாவை!

ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பிரச்சினைக்கான தீர்வு நகல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நகலில் தீர்வானது ஒற்றையாட்சியின் கீழ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகலினை ஏற்றுக்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சுமந்திரன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் சுமந்திரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அது அவருடைய தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை அவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கையின் இறையாண்மையையும் அதன் ஒருமைப்பாட்டையும் காப்பேன் என சத்தியப்பிரமானம் செய்து , பாராளுமன்ற வரப்பிரசாதங்களையும் பின்கதவால் கிடைக்கும் சலுகைகளையும் அனுபவித்து வருகின்றார் மாவை என்பது யாவரும் அறிந்த விடயம்.


4 comments:

  1. ஒற்றையாட்சியை ஏற்க வில்லையாயின் எவ்வாறு பாராளுமன்றின் சிற்றுண்டிச்சாலையில் மலிவு விலையில் வழங்கும் கோழிப்பொரியலை இரண்டுகையாலும் பிடித்து கொடுப்பால் வீணி வடிய கடிக்க முடியம் என்ற கேள்விக்கு மாவையிடம் பதிலுண்டா?

    ReplyDelete
  2. ஈய ஈழ தேசியம்May 31, 2013 at 5:37 PM

    தங்களது வசதியான வாழ்க்கைகாக ஒற்றையாட்சிமுறையை ஆட்சிய ஏற்று வாழ்பவர்கள் இவர்கள். மக்களை முட்டாளாக்கி அரசியல் செய்ய மாகாண ஆட்சி வேண்டும்.

    ReplyDelete
  3. Mavai is the long standing member of the party,which survives in different names like FedParty,Tamil Arasu Kadchchi and now TNA.His experiences with the tamil leaders,that influnces the way he think and behave,especially how to dramatize the tamil voters time to time.

    ReplyDelete
  4. மேற்கு உலக நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவிலும் சரி ஒற்றை ஆட்சியின் கீழ் சுதந்திரமான மாநில அரசுகள் என்ற யாதார்த்த பூர்வமான ஆட்சி முறையே நடைபெறுகிறது. இதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டிருந்தால், இவ்வளவு அழிவுகளும், இழப்புகளும் இன்றி ஈழத்தமிழ் மக்கள் எப்போதோ நிம்மதியாக வாழ்த்திருக்கலாம்.
    அதை விட்டு, சுயநல வாத தமிழ் அரசியல் வாதிகளின் பசப்பு வார்த்தைகளுக்கும், புலிகளின் முட்டாள் சிந்தனையுடனான செயல்பாட்டிக்கும் மயக்கி, தமிழீழம் என்ற மாயையில் மயங்கி வெறும் கோவணத்துடன் நிற்கும் ஈழத்தமிழர் மீண்டும், மீண்டும் அந்த தமிழீழ சாக்கடை அரசியலில் விழுந்து, வாழ்விழந்து, அல்லல் படமாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
    Vannian

    ReplyDelete