சுற்றுலாதுறையில் துரித வளர்ச்சியடைந்து வரும் நாடு இலங்கை. பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி.
யுத்தம் முடிவடைந்து அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் இலங்கை சுற்றுலாவுக்கு பொருத்தமான நாடு என ஐக்கிய இராச்சியத்தின் த மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது. உலகின் புகழ் பெற்ற விமான நிலையமான பிரிட்டிஷ் எயார் வேஸ் விமான நிறுவனம் 15 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளமை இதற்கு சிற்நத உதாரணம் என அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் வர்த்தக தொகுதியில் ஹோட்டல்கள், சிற்றுண்டி சாலைகள் துரிதமாக நிர்மாணிக்கப்படுவதை அவதானிக்கும் போது இலங்கை மீண்டும் வளர்ச்சியடைவது நிதர்சனமானது என த மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஏகாதிபத்திய ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் கொழும்பு நகரின் கவர்ச்சியை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நவீன கட்டிடங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பின்னவல யானைகள் காப்பகம், உல்லாச பயணிகளை பெருமளவில் கவரும் ஒரு இடம் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment