வடமாகாணசபை தேர்தல் எப்போது? என்ற கேள்விக்கு பிரதி தேர்தல் ஆணையாளர் பதில்!
அனைத்து ஊடகங்களிலும் வெளியாகிக்கொண்டு இருக்கும் வடமாகாண சபை தேர்தல் எப்போது என்ற செய்திக்கு தேர்தல்கள் திணைக்களத்தால் பதிலளிக்க முடியாது என தேர்தல் திணைக்களத்தின் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் அரசியல் யாப்பின் படி ஒரு மாகாண சபைத்தேர்தலை முதல் முறையாக எப்போது நடத்துவது என்பதை ஜனாதிபதியாக இருப்பவரே தீர்மானிக்க முடியும் என யாழ் ஞானம்ஸ் ஹேட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகானங்கள் ஒன்றிணைந்ததாகவே இறுதியாக தேர்தல் நடைபெற்றது ஆனால் தற்போது வடக்கு மாகாண சபை தனியாகவும் கிழக்கு மாகாணசபை தனியாகவும் இயங்குவதால் வடமாகாண சபை என்பதும் புதிய மாகாணசபை என்பதால் இதற்குரிய தேர்தலை நடத்துமாறு தேர்தல் செயலகத்திற்கு ஜனாதிபதி அறிவித்தால் மட்டுமே வடமாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிட்டார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்தால் அந்த திகதியில் இருந்து ஒரு வார காலத்திற்குள் தேர்தல் திணைக்களம் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கு மாறு கோரிக்கை விடுவதுடன் அடுத்த 14 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 14 நாளில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களது பெயர் விபரங்கள் வர்த்த மானியில் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.
வர்த்த மானியில் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்ட தினத்தில் இருந்து ஜந்து தொடக்கம் எட்டு வாரத்திற்குள் உள்ள ஒரு திகதியில் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல் திணைக்களத்தின் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment