UA 851 என்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, புதன்கிழமை அன்று, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு புறப்பட்டது. விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததைக் கண்ட பணிப்பெண்கள் கதவைத் தட்டியுள்ளனர். வெளியே வர மறுத்த அந்தப் பயணி, அறைக்குள் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதனால் விமானத்தை அலாஸ்காவில் உடனடியாகத் தரையிறக்க நேரிட்டது. விமானம் தரையிறங்கியவுடன், அந்தப் பயணி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
மற்ற பயணிகள் அனைவரும் அன்று இரவு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள் வியாழன் அன்று, அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. மற்றபடி, அவரது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை. பயணிகளில் சிலர், இணையதளத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆசிய நாட்டுப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். மருத்துவ உதவி தேவைப்பட்டதால் விமானம் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது என்று தெரிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment