Saturday, May 4, 2013

சந்திரிக்கா - சிராணி கூட்டுச்சேர்ந்து புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறார்களாம்... தேசிய அமைப்பாளராக விமுக்தி குமாரத்துங்க!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா இருவரினதும் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என நம்பத்தகுந்த செய்திகள் அடிபடுகின்றன.

ஆரம்பிக்கப்படவுள்ள அந்த புதியகட்சிக்குத் தேவையான அனைத்துப் பொருளுதவியையும் மேற்கத்தேய அரசாங்கம் ஒன்று, இலங்கையிலுள்ள தனது தூதுவராலயத்தின் மூலம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதெனவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதிய கட்சிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரபலங்களும், தற்போது அரசாங்கத்தில் பதவி வகிக்கின்ற முக்கிய உறுப்பினர்கள் பலரும் ஒன்றிணைவதற்கு முன்வந்துள்ளதாகவும், சிராணி பண்டாரநாயக்கா தனது சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததும் உடனடியாக புதிய கட்சி சார்ந்த விடயங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அறியக்கிடக்கின்றது.

புதிய கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்கவின் புதல்வன் விமுக்தி குமாரத்துங்கவை நியமிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

(கேஎப்)

3 comments :

Anonymous ,  May 4, 2013 at 6:20 PM  

A Party about to be start with an influence of a foreign country.The nation of the country must be very cautious of the foreign influence.It can damage the untiy of the country.When you invite a third person especially a stranger into your scene be sure that you are worsening the matter.The main organizers of the party may be experienced and highly educated but,if they are backed by foreign influence,you are compelled to think about this twice thrice or more and more.

Arya ,  May 5, 2013 at 3:50 AM  

நீங்க ஜனாதிபதியா இருந்து என்னத்த கிழிச்ச , மகிந்த தன் பதவிக் காலத்தில் பயங்கரவாதத்தை மிக விரைவில் ஒழித்து மக்களை காத்தார் , அவர் தான் இலங்கைக்கு அவர் ஆயில் காலம் வரை தலைவர். இனியாவது நாடு முன்னேற வழி விடு உன் முன்னாள் வெள்ளைகார துரைகளின் எடு பிடியாக செயல் படாதே , கனடாவில் உள்ள உன் வில்லா தொடர்பாக மகிந்த தோண்ட வெளிகிட்டால் " விமானத்தை " விட பெரிய பூதம் எல்லாம் வெளி வரும்.

Anonymous ,  May 5, 2013 at 7:17 PM  

Yes it is true that the Hon Lady was in the high office,during her high position in the office twice she hasn´t achieved anything.If am not capable of doing anything it is my part of duty to give a chance to other efficient person to do that job.citizens cannot be tools for anyone to gain experience.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com