பொது பல சேனா இயக்கத்தினால் சென்ற மார்ச் மாதம் காலி ரங்வாவில பிலானவில் திறந்துவைத்து 'மெத் செவன - பௌத்த தலைமைத்துவ கல்விக் கல்லூரி' என்ற பெயரில் இயங்கிவந்த கட்டடத்திலிருந்து அவசரமாக வெளியேறுமாறு காலி மேலதிக நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கின்றது.
படகொட கமகே அஸங்கஅமரசிரி என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ள மனுவை விசாரணை செய்த நீதவான் குணேந்திர முனசிங்க இந்த ஆணையை பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கடகொடஅத்தே ஞானஸார தேரர், எம்பிலிப்பிட்டியே விஜித தேரர், விதாரன்தெனியே நந்த தேரர் மற்றும் லிட்ல் ஸ்மைல் எஸோஸியேஷன் எனும் பெயரில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த ஷிரான் லக்ஷித்த ஆகியோருக்கே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2012 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பொது பல சேனாவினர் தமக்குச் சொந்தமான இடத்திலிருந்து 3 ஏக்கர் நிலத்தை பலாத்காரமாகக் கைப்பற்றியுள்ளதாகவும், இதுபற்றி பல முறை தான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் எந்தப் பரிகாரமும் கிடைக்கவில்லையென்றும் குறிப்பிட்டு மனுதாரர் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு மனு சமர்ப்பித்திருந்தார்.
(கலைமகன் பைரூஸ்)
No comments:
Post a Comment