உயர்தரத்தில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு புதிய சுற்றறிக்கை
கல்வியமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், உயர்தரத்திற்கு மாணவர்களைச் சேர்க்கும்போது, அவ்வப் பாடசாலைகளில் கல்விகற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, உயர்தரத்தில் கல்வி கற்பிக்கக்கூடியபாடசாலைகளில் சகல பிரிவுகளும் இல்லாத பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், இன்னும் வெற்றிடங்கள் நிலவுமாயின் பாடசாலை அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள 1 ஏ அல்லாத பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஒழுங்குமுறைப்படி சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் பற்றிய விபரங்களையும், பிரிவுகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதுபற்றியும் அறிக்கை தயாரித்து அதிபர் அதனை, ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இந்த சுற்றறிக்கைப்படி செயற்படாத அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment