Thursday, May 2, 2013

மே தினக் கூட்டத்திற்கு பஸ்சின் மிதிபலகையில் சென்ற தொழிலாளி பலி

நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தினக் கூட்டத்திற்குச் சென்ற டயகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கருப்பையா காமராஜ் தொழிலாளி ஒருவர் பஸ் மிதி பலகையிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று(01.05.2013)காலை 10 மணிக்கு லிந்துலை பொலிஸ் பிரிவில் நடைபெற்றுள்ளது.

டயகமவில் இருந்து நுவரெலியாவிற்கு டெஸ்போர்ட் வழியாக சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் இருந்து குறித்த நபர் விழுந்து படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. It is a curse what the police traffic system is doing?According to the traffice system No passenger is allowed to travel in the footboard.How risky it is.Utterly nonsense.The country is far far beyond the international level,sorry
    except south Indian passenger transport

    ReplyDelete