Friday, May 10, 2013

கோட்டா-பசில் இன்றி தங்களால் கொழும்பு நகரை வளர்ச்சியடையச் செய்யமுடியாதாம். மாநகர மேயர் முஸம்மில்.

கொழும்பு மாநகர சபை ஐக்கிய தேசியகி கட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. சபையின் மேயராக அக்கட்சியின் நீண்டகால உறுப்பினராக ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விருது வழங்கும் விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸமில், இன்று கொழும்பு நகர் ஒரு ரம்மியமான நகராக மாறியுள்ளதெனவும் ரம்மியமான நகரை உருவாக்குவதில் அரசாங்கத்தினதும் பாதுகாப்பு செயலாளரினதும் அமைச்சர் பசில் ராஜபக்சவினதும் ஆதரவு பாராட்டத்தக்கதெனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள ஏனைய நகரங்களுடன் ஒப்பிடும் போது கொழும்பு நகரம் இன்று துரித வளர்ச்சி கண்டு வரும் ஓர்நகராக மாறி வருகின்றது எனத் தெரிவிக்கும் அவர் இந்த வளர்ச்சிக்கான காரணம் கொழும்பு மாநகர சபை மட்டுமல்ல எமக்கு அரசாங்கம் முழு அளவிலான அனுசரணையை வழங்கி வருவதாகும் என்கின்றார்.

மேலும் கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வழங்கும் பங்களிப்பை தங்களால் மறந்து விட முயாது என்றும் எந்த வேலையிலிருந்தாலும் தமக்கு கரம் கொடுப்பதற்கு அமைச்சர் பெசில் ராஜபக்ஷ எம்மோடு பக்கபலமாக நின்று செயல்படுகின்றார் என்றும் கொழும்பு மாநகர மேயர் தெரிவிக்கின்றார்.

கொழும்பு நகரில் உணவு பாதுகாப்பை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இவ்விருது வழங்கும்விழாவில் பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகரவும் கலந்து கொண்டார்.

1 comment:

  1. While comparing with the other cities around the world.Colombo city always comes below the level.We need
    Good and beautiful shuttle services of passenger
    transports,The tram services like the older days,well controlled traffic system,broadining the roads and streets,daily cleaning of the streets and pavements.Wiping out the culprits and pickpockets,well painted buildings and cleaning up the beaches and well maintenanace of the beaches and cities.Beady eyed police personnel watching the entire city.This would make the city more and more colourful.

    ReplyDelete