Tuesday, May 21, 2013

எங்கிருந்தோ கிளம்பிய முன்னாள் ஜனாதிபதி, சிங்கள பெளத்தர்களை அடித்துதைக்கிறார்!

ஆளும் கட்சியினுள் உட்பூசல் வலுவடைகின்றது என்பதைக் காட்டி, 2014 இல் தான் ஆட்சி அமைக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதாகவும், தமிழ் தேசியக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்து பாரிய முன்னணி அரசாங்கமொன்று அமைக்கவுள்ளதாக எதிர்க்கட்சி சூளுரைப்பதாகவும்,எங்கிருந்தோ மீண்டும் எழும்பியிருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க மீண்டும் ஒருமுறை சிங்கள பௌத்தர்களை அடித்துதைக்க முயல்வதாகவும், எது எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தேசிய சக்தியினாலேயே தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் ஹெல உறுமயவினால் சென்ற மே 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இராணுவ நினைவு நிகழ்வில் தெளிவுறுத்தப்பட்டது.

1994 ஆம் ஆண்டு 62% வாக்குகளை சந்திரிக்கா பண்டாரநாயக்கா பெற்றுக்கொண்டு, ஜனாதிபதியாகி இலங்கையில் தனித்துவ யாப்பொன்றை தனக்குச் சாதமாக அமைப்பதற்கு முயன்றதாகவும், அது சாத்தியமாகாததால் மீண்டும் 1999 இல் அதனை மேற்கொள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது முயன்றதாகவும், அவையிரண்டுமே இனஒருமைப்பாட்டினால் தோல்கண்டது என்பதை மீண்டும் ஒருமுறை சந்திரிக்கா அம்மையாருக்கு நினைவுறுத்த விரும்புகிறேன் எனவும் ஜாதிக்க ஹெல உறுமய அவ்வைபவத்தில் குறிப்பிட்டது.

அதுபோலவே, அமெரிக்கா, ஐரோப்பிய அமைப்பு, நோர்வே போன்ற நாடுகளின் உதவியுடன், இந்திய அநுசரணையுடன் நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சி 2004 இல் தோற்கடிக்கப்பட்டதும் மக்கள் சக்தியினாலேயே என்றும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி மூலம் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எடுத்த முயற்சி தோற்கடிக்கப்பட்டதென்றும், சந்திரிக்கா அம்மையாரினால் பிரபாகரனுக்கு வழங்கப்படவிருந்த சுனாமி உதவி மக்களின் உத்வேகத்தினாலும், சிங்கள எதிர்ப்புக்களினாலும் இல்லாமற் செய்யப்பட்டதென்பதையும் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மாகாண சபை முறையை இல்லாமற் செய்வதற்கான சட்டமூலமொன்றைப் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும், மாகாண சபைக்கு எதிரான எதிர்ப்பலையை வீதிக்குக் கொண்டுவரவுள்ளதாகவும் ஜாதிக்க ஹெல உறுமய குறிப்பிட்டது. ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் அதுரலியே ரதன தேரர், செயலாளர் நாயகம் பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க ஆகியோர் அந்நிகழ்வில் உரையாற்றினர்.

(கேஎப்)

No comments:

Post a Comment