Saturday, May 18, 2013

"நீங்கள் ஒரு முஸ்லிமை தாக்கும் போது உங்கள் மீது அனைத்து முஸ்லிம்களும் தாக்குவார்கள்" - பொஸ்டன் குண்டுதாரி

குண்டுதாரிக்கு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்க்கப்படுகின்றது

பொஸ்டன் குண்டுத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 வயது சொகர் தமர்னெவ், குறித்த தாக்குதல் 'பழிக்கு பழி' நடவடிக்கை என அவர் விட்டுச் சென்ற சர்னெவ் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாருடனான துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து சர்னெவ் துப்பாக்கிக் காயங்களுடன் படகொன்றில் மறைந்து இருந்த நிலையில் பிடிபட்டார்.

இதில் அவர் ஒளிந்திருந்த படகின் உள் சுவரில் பேனையால் குறிப்பொன்றை எழுதியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் அவர், "நீங்கள் ஒரு முஸ்லிமை தாக்கும் போது உங்கள் மீது அனைத்து முஸ்லிம்களும் தாக்குவார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்ட தனது சகோதரர் "தியாகி" என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி பொஸ்டன் குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப் பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய சகோதரர்களில் மூத்தவரான 26 வயது தமர்லன் பொலிஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட சர்னெவ் பொஸ்டனில் இருக்கும் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்க்கப்படுகின்றது

No comments:

Post a Comment