Friday, May 10, 2013

ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமாம்! இலங்கை மின்சார சபை.

மே தினத்தன்று ஜனாதிபதி வழங்கிய மின் கட்டண நிவாரணம், ஜனாதிபதி வாக்களித்தபடி, பொது மக்களுக்கு வழங்கப்படுமென, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அறிவித்த நிவாரணம் வழங்கப்பட மாட்டாது என, ஒரு சில ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் அடிப்படையற்றவையென, சபை தெரிவித்துள்ளது.

குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென, ஜனாதிபதி மே தினத்தன்று அறிவித்தார். பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் இணக்கத்துடன் இந்நிவாரணம் வழங்கப்படுமென, இலஙகை மின்சார சபையின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல், மின் கட்டணம் அறவிடும் முறை அமுல்படுத்தப்படும். 30 அலகு வரைக்கும் எவ்வித கட்டண மாற்றமும், ஏற்படாது. இதன்போது முன்னர் அலகொன்றுக்காக அறவிடப்பட்ட மூன்று ரூபாவில் எதுவித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாதென, தெரிவித்துள்ளது. 31 அலகிலிருந்து 60 அலகு வரைக்கும் திருத்தத்திற்கு முன்னர் அமுலில் இருந்த கட்டணமே, அறவிடப்படும். 90 அலகுகளை தாண்டும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு சில மாதஙகளில் 5 அலகை விட, அதிகமாக பயன்படுத்த வேண்டி ஏற்பட்டால், 90 அலகுகளுக்கே, கட்டணம் தயாரிக்கப்படுமென, மின்சார சபை தெரிவித்துள்ளது.

180 அலகு வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு தற்போது அமுலில் உள்ள எரிபொருள் கட்டணத்தில் 25 வீதம் குறைக்கப்படும். இதன் பிரகாரம் 31 அலகு முதல் 60 அலகிற்கு 25 வீதம் வரையும், 61 முதல் 180 வரையான அலகிற்கு 30 வீதம் வரையும் மின் கட்டண பட்டியலில் விலை மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென, சபை தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com