கௌதம புத்தரின் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தலாம்! - பான் கீ மூன்
உலகெங்கிலுமுள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர் என்றும், இவ்வாறான பிரச்சினைகளுக்கு அச்சமின்றி முகம்கொடுக்கும் சக்தி பௌத்த மதத்தை கற்பதன் மூலம் கிடைக்குமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
மேலும் சமாதானம், தர்மம் அஹிம்சை தொடர்பில் பௌத்த மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இலங்கை, தாய்லாந்து, மியன்மார் , இந்தியா உட்பட உலகெங்கிலுமுள்ள பௌத்தர்கள் இன்றைய தினம் வெசாக் உற்சவத்தை கொண்டாடுகின்றனர். புத்தரின் பிறப்பு, ஞானம்பெறும் மற்றும் பரிநிர்வாணம் அடைதலை குறிக்கும் முகமாக வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மும்மங்கல தினமாக இன்றைய நாள் கருதப்படுகிறது. இவ்வாறான நிலையில் கௌதம புத்தர் காட்டித்தந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உலகில் சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வெளியிட்டுள்ள வெசாக் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment