Sunday, May 5, 2013

கருணாவின் சகா கையில் ஒப்பந்தம், ஒன்றரை வருடத்துக்கும் மேலாக ஆமை வேகத்தில் மைதான கட்டுமாணப் பணி!

கடுப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர்.

மட்டக்களப்பு நகரப் பகுதியிலுள்ள மைதானமொன்றைப் புனரமைத்து பார்வையாளர் மண்டபத்தை புதிதாக அமைப்பதற்கு அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கியுள்ளபோதும் அதன் கட்டுமாண மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பிட்ட மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டபோதும் அதன் பணிகள் மிக மிகக் குறைவான வேகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருகிறன. அரசாங்கம் இதற்கான சகல நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளபோதும் கட்டமாணப் பணிகளில் பாரிய முன்னேற்றம் காணப்படவில்லை.

அண்மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குறித்த விளையாட்டு மைதானத்திற்குச் சென்று அதன் பணிகளைப் பார்வையிட்டார். மிகவும் மந்தகதியில் இடம்பெற்றுவரும் மைதானத்தின் கட்டுமாணப் பணிகள் குறித்து ஆத்திரமடைந்த அவர், உரிய தரப்பினரைத் திட்டித் தீர்த்தார்.

இம்மைதானத்தின் கட்டுமாணப் பணிகள் தாமதமடைவதற்கான பின்னணியை ஆராய்ந்து பார்த்தபோது, குறித்த மைதானத்தின் கட்டுமாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை எடுத்தவர் கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்திக்கு நெருக்கமானவர் என்பது அம்பலமானது. ஒதுக்கப்பட்ட பணத்தை முழுமையாக எடுத்துக்கொண்டு ஆமை வேகத்தில் கட்டுமாணப் பணிகளை குறித்த நபர் முன்னகர்த்தி வருவது தெரியவந்தது.

சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்கமாட்டார் என்ற பழமொழியை நினைவு படுத்தும்வகையில் இந்தச் செயல் அமைந்திருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. எப்போதும் எமது சுயநலவாத தமிழ் துரோகக் கூட்டம் பொது மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து தங்கள் வாழ்வை பெருக்குவதேயே நோக்கமாகக் கொண்டுள்ளனர். அரசாங்கம் கொடுத்த பணத்தை தங்கள் மூலதனமாக வங்களில் வைப்பிலிட்டு, கிடைக்கும் வட்டியை மட்டும் சேர்த்து பாவிப்பதும், பின்னர் அதனை மொத்த கணக்காக காட்டுவதும் மட்டுமல்ல, கட்டுமானத்திலும் தில்லு முள்ளு செய்து தகுதியற்ற வேலைகளை செய்து அரைகுறையாக முடிப்பதும் துரோகக் கும்பலுக்கு கைவந்த கலை. இதுகளை விட இராணுவத்தின் பொறுப்பில் நடக்கும் வேலைகள் மிகவும் மேலானது.

    ReplyDelete