Monday, May 6, 2013

மோட்டார் வாகனங்களுக்கு உங்கள் பெயரில் இலக்கத்தகடு

மோட்டார் வாகனங்களுக்கு 3 ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட இலக்கத் தகடுகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என்று மோட்டார் வாகன திணைக்களத்தின் பதிவாளர் எஸ்.எச். ஹரிஸ்சந்திர அறிவித்துள்ளார்.

இத்துடன் எவருக்காவது தன்னுடைய பெயரை வாகனத் தகட்டில் பொறிக்க விரும்பினால் அவர் திணைக்களத்துக்கு 10 இலட்ச ரூபாவை கட்டணமாக செலுத்தி இந்த வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம் எனக்குறிப்பிட்டார்.

மேலும் முதல் தடவையாக 3 ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட இலக்க தகடுகளில் 0001 ல் இருந்து ஆரம்பமாகும். இதே வேளையில் ஜீப் வண்டிகள் மற்றும் டபள் கெப்க்கும் 3 ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட இலக்கத் தகடுகளே கொடுக்கப்படும். எனக்குறிப்பிட்ட அவர் தற்போது இலங்கைக்கு தருவிக்கப்பட்டிருக்கும் 64 இலட்சம் புதிய வாகனங்களுக்கு இந்த 3 ஆங்கில இலக்க தகடுகள் பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஒருவர் தன்னுடைய பெயரை இலக்கத் தகடுகளில் பொறித்த வாகனங்களை 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும் என்றும் அதற்குப் பின்னர் மேலும் கட்டணம் செலுத்தி அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com