Friday, May 17, 2013

விமல் வீரவன்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

சென்ற 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறிய அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதுவிடின், தங்கள் கட்சியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோருடன் கடுவல நகரத்தில் கடும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப் போவதாக கடுவல நகரபிதா ஜீ.எம். புத்ததாஸ குறிப்பிட்டுள்ளார்.

கடுவலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் சட்டங்களை மீறியமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மனுவுக்குப் பதில் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்குசெய்திருந்த 72 வயதைத் தாண்டிய அந்த நகராதிபதி மேலும்,

'எனது தேர்தல் நடவடிக்கையின் போது எனது காரியாலயத்தையும், எனது ஆதரவாளர்களின் வீடுகளையும் தகர்த்தனர். தேர்தல் சட்டங்களை அவமதித்தார்கள். இது சிறந்த ஆட்சிமுறையா? சிறந்ததொரு ஆட்சி முறைக்காக விமல் வீரவன்ச செயற்பட்டாரா என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது. விமல் வீரவன்சவின் இந்த அநீதிக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுவிடின் நாங்கள் 1000, 2000 பேரை இணைத்துக்கொண்டு கடும் உண்ணாவிரத்தை மேற்கொள்வோம்.

புத்ததாஸ செய்வதை சரியாகத்தான் செய்வார். இளநீர் குடித்துக் குடித்து உண்ணாவிரதம் இருக்க மாட்டோம். சட்டத்துக்கு எதிராக நிற்பவர்களுக்கு எதிராக நான் செயற்படுவேன். மனித உரிமைகளை மீறிய இலங்கையின் முதலவர்தான் விமல் வீவன்ச என்பவர். ஜனாதிபதியிடமிருந்து இதற்கான சிறந்ததொரு தீர்வு கிடைக்கும் என நான் நம்புகிறேன்' என்றும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

2 comments:

  1. Now in these days "Hunger Strikes" are meaningless.The justice system is there why not Mr .Buddhadasa (Kaduwela mayor) prosecute Mr.Weerawamsa at the courts of law.

    ReplyDelete
  2. Ithukkupprahum ungal vayathukku thevaiya? Summa ponga sar

    ReplyDelete