Monday, May 13, 2013

பொது பல சேனாவைக் கலைத்துவிடத் தயார்....(?)

தங்கள் அமைப்பு நோர்வே, அமெரிக்கா மற்றும் மேலைத்தேய நாடுகளிலிருந்து பணவசூல் செய்ததை ஆதாரத்துடன் நிரூபித்தால் பொதுமக்களிடமிருந்து மன்னிப்புப் பெற்றுக்கொண்டு, 2 மணி நேரத்திற்குள் பொது பல சேனா அமைப்பை கலைத்துவிடுவதாக, பொது பல சேனா இயக்கத்தின் செயலாளர்நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகிறார்.

இன்று (13) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர் விமல் வீரவன்ச பொது பல சேனா இயக்கம் மேற்கத்தேயத்தில் பண வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாகவும், அவரால் முடிந்தால் அதனை தக்க சான்றுகளுடன் காட்டுமாறு தாம் அவருக்கு சவால் விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, பொதுபல சேனா இயக்கத்தின் கட்டளையிடும் அதிகாரி டிலன்த விதானகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏஷியன் ட்ரிப்யூன் இணையத்தளத்தில் பொது பல சேனா இயக்கத்தினர் நோர்வே அரசினால் உதவிபெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் அமைந்துள்ள நேர்வே தூதுவராலயம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் தங்களும் பொது பல சேனா அமைப்பிற்கு கல்விசார் தேவைகளுக்கு நன்கொடை வழங்கியதாகவும், ஆதிக்கம் மிக்க புலம் பெயர் தமிழர்களுடன் உரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment