Sunday, May 12, 2013

க.பொ.த உயர்தர பாட திட்டத்தில் இதழியல் பாட அறிமுக கலந்துரையாடல்.

மட்டகளப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் முதன் முறையாக க .பொ.த உயர்தர பாட திட்டத்தில் இதழியல் பாட அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மட் - வாழைச்சேனை இந்து கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஏற்பாடில் 11.05.2013 சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கல்லூரி அதிபர் க .தவராஜா தலைமையில் வாழைச்சேனை இந்து கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

இதழியல் பாடம் 2006 முதல் க.பொ.த உயர்தர பாட திட்டத்தில் இலங்கையில் அறிமுகப் படுத்த பட்டிருந்தாலும் மட்டகளப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் இது வரை எந்த பாடசாலையும் இப் பாடத்தை ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலை மேலும் தொடராமல் இருக்க இதழியலின் முக்கியத்துவம் என்ற தொனிபொருளில் கிழக்கு எழுகுரல் ஊடக மையத்தின் அனுசரணையில் மட்-வாழைச்சேனை இந்து கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்கம் இணைந்து இவ் விழிப்புணர்வு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து நடாத்தியது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளை பற்று பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஷ் , சிறப்பு அதிதிகளாக கோறளை பற்று கோட்ட கல்வி பணிப்பாளர் ந .குணலிங்கம் , வாழைச்சேனை இந்து கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் தெ .ஜெயப்பிரதீபன் உட்பட வளவாளர்களாக ரூபவாகினி தொலைகாட்சி தமிழ் பிரிவு தயாரிபாளரும் , சிரேஸ்ட ஊடகவியலாளருமான திரு எஸ் மோசேஸ் எழுகுரல் ஊடக மையத்தின் இணைப்பாளர் திரு த .தஜிவரன் மற்றும் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் , மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment