Tuesday, May 21, 2013

அறபுகளின் மரண தண்டனை முறையை எங்களால் மாற்ற முடியாது!!

மத்திய கிழக்கு நாடுகளில் வெவ்வேறு குற்றங்கள் புரிந்து, நீதிமன்றங்களினால் தண்டனை வழங்கப்பட்டுள்ள இலங்கையர் தொகை 10 மேற்பட்டது எனவும், அவர்களில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்களும் உள்ளனர் என்றும், மத்திய கிழக்கு நாடுகளில் வெவ்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளஇலங்கையரை அத்தண்டனைகளிலிருந்து விடுவிக்க தமக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு குறிப்பிடுகிறது.

எந்தவொரு நாட்டினதும் சட்டத்திற்கு எதிராகச் செயற்படுவதற்கு வேறு ஒரு நாட்டிற்கு முடியாது என்பதை அமைச்சர் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சோ பிற அமைப்புக்களோ மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டுபாய், அபூதாபி, கட்டார் போன்ற நாடுகளில் இலங்கையர் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

3 comments :

Anonymous ,  May 21, 2013 at 8:36 PM  

It is true that you cannot change a country`s strict laws,it is the matter of the International human rights organizations or UNO,but you need not give permission to the poor innocent workers to go to these countries also you can find an alternative solution something like finding jobs in the country itself.
as a result,You are saving the poor workers from the brutal killings.

Anonymous ,  May 22, 2013 at 3:13 PM  

Stop sending our people to the barbaric countries.
Give education and jobs for those people to develop our country.

Anonymous ,  May 22, 2013 at 8:54 PM  

Hon.Minister`s comment is laughable.
because it is quite clear that the fault is purely in his hands.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com