எதிர்க் கட்சித் தலைவர் வேலை நிறுத்தத்திற்கு அழைத்தார்! ஆனால் அவருடைய.... - ஜோன்ஸ்டன்
பொது வேலை நிறுத்தம் நடத்துவதாக எதிர்க் கட்சியினர் கூறினாலும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி கூட நேற்று களனி பல்கலைக்கழகத்தில் விரிவுரை நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து தெரிவித்தார்.
வாய்மூல விடைக்கான கேள்வி பதில் நேரத்தில் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். வேலை நிறுத்தம் செய்வதற்காக வீதியில் இருக்க வேண்டியவர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு வந்து கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்க்கட்சி வேலை நிறுத்தம் குறித்து சபையில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க தொழிற்சங்க வேலைநிறுத்தம் கொழும்புக்கு வெளியில் வெற்றியளித்துள்ளதாக கூறினார். இது தொடர்பாக சபையில் கருத்துத் தெரிவித்த ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் எதிர்த்தரப்பு வேலை நிறுத்தம் புஸ்வாணமாகி தோல்வியடைந்துள்ளதாகவும் நாட்டு மக்கள் அரசாங்கத்துடனே இருப்பதாகவும் தெரிவித்தார்.
1 comments :
Opposition can oppose but Obstructionism cannot be the duty of the opposition.
Post a Comment