Monday, May 13, 2013

யாழ் 'போட்' மாணவியர் விபச்சார விடுதி முற்றுகை

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியரை வைத்து விபச்சார நடவடிக்கை நடாத்திவந்த விடுதி இன்று யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இவ்விடுதியில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவியொருத்தியும் இளைஞன் ஒருவனும் கையும்களவுமாகபிடிபட்டுள்ளனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கநகை வியாபாரத்தில் ஈடுபடக்கூடிய ஒருவரின் மகன் எனவும், குறித்த மாணவி சுன்னாகத்தை சேர்ந்தவர் எனவும் தெரிய வருகின்றது.

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள 'போட்' என்ற விடுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த இளைஞன் பாடசாலை மாணவியை காரில் அழைத்து வந்து விபச்சரத்தில் ஈடுபடுத்தியமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் கலாசார சீரழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான சுற்றிவளைப்புச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதன் மூலம் யாழ்ப்பாணத்தில் நிகழும் கலாசாரச் சீரழிவுகளை காலக்கிரமத்தில் அழித்துவிடலாம் என்ற எதிர்பார்க்கை யாழ்ப்பாணப் பிரதேசரச் செயலகத்திற்கு உள்ளதெனவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

5 comments :

Anonymous ,  May 14, 2013 at 6:38 PM  

Peace discipline and order always protect the nation and the country.
We were the cause to destroy everything.Mobile telephones,more freedom from the parents,lack of advise by the parents,by the teachers and by the society.Exposure of sexual articles,films,through the internet and some of the media.
Hotels or private inns which encourages them to fall into the deadliest pits.While considering the past,the elder society the teachers and parents always took care about the younsters.But the revolutionery wind came along,everything were destroyed uprooted,teachers,parents and the elders were put to aside and the wild beastly freedom was declared by the yougsters and now we pay for everything.Justice department,police and law should play an important role and bring everything under control.

Anonymous ,  May 14, 2013 at 6:43 PM  

This is really a psycological challenge to the entire Jaffna society.

Anonymous ,  May 14, 2013 at 9:09 PM  

This is more serious than an epidemic.It might destroy the future generation,poverty cannot be the reason but temptation may lead the society to evil destruction.so the society might try to chase the dealiest evil.

Anonymous ,  May 19, 2013 at 4:07 PM  

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக பகிரங்கமாக வெளியிடுவது மனிதாபிமானமற்ற செயல். அவர்களுக்கும் ஒரு மானம், கௌரவம் என்ற ஒன்று உண்டு.

மனித நேயத்தோடு கைகூப்பிக் கேட்கின்றவனைக் கூட மன்னிக்காமல் இவ்வாறு பகிரங்கப் படுத்தியது அவர்களின் செயலைவிட மிகக் கொடுமையானது.

Anonymous ,  May 21, 2013 at 8:53 AM  

உண்மை, அவர்கள் நினைத்தால் (இருவரும் சம்மதத்துடன் செயற்பட்டிருந்தால்) இவ்வாறு அவர்களின் செய்தியை வெளியிட்ட அனைத்து ஊடகங்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

இலங்கை சட்டப்படி 16 வயதிற்கு மேற்பட்ட இருவர் விரும்பி ஒரு விடுதியில் தங்கி உள்ளாசமாக இருக்க முடியும்.

எனவே, இவ்வாறான செய்தியை பரப்பி தங்களது மானத்தையும், கௌரவத்தையும் இல்லாமல் செய்த குற்றத்திற்காக இச்செய்தியை வெளியிட்ட அனைத்து செய்தி ஊடகங்களிலிருந்தும் அவர்களுக்கு நஷ்டஈடு கோர முடியும்.

ஏனெனில் குற்றங்களையும் திருத்துவதற்கு அழகிய முறைகள் இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றி செயற்பட்டிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

அப்பாவிகள், ஏழைகள், குரலற்றவர்கள் செய்தால் குற்றம். அதனை பகிரங்கப்படுத்துவோம் என்று ஊடகங்கள் கௌம்பி இருக்கின்றன. ஆனால், எத்தனையோ மேல் வர்க்கத்தினர், உயர்ந்தவர்கள் என தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அரசியல்வாதிகள் எத்தனை எத்தனையோ அநியாயங்களைச் செய்கிறார்கள் அவைகளை இந்த ஊடகங்கள் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது (இலங்கை நெட் மற்றும் எனைய சில ஊடகங்கள் - சிலபோது இதிலிருந்து விதிவிலக்காக இருக்கலாம்)

எனவே, ஊடகங்கள், நீதித்துறை என்பற்றுக்கு நிச்சயமாக கண்கள் கட்டப்பட்டிருக்க வேண்டும். (நீதி தேவதை). ஏனெனில் அவர்களின் செயற்பாடுகள் எப்போது நீதியாக, நடுநிலையாக, பக்கச்சார்பின்றி இருக்க வேண்டும் என்பதற்காக.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com