தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வடக்கு பாகிஸ்தானின் மிரான்ஷா பகுதியில் காஷ்மா என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இன்று காலை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின.
அதில், அந்த வீடு இடித்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி வீட்டில் தங்கியிருந்த 6 பேர் பலியாகினர். 2 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் 2ம் கட்ட தலைவனான வலி-யுர்-ரஹ்மான் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆப்கானிய தலிபான் இயக்கத்தின் ஆதரவு பெற்ற தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தின் தற்போதைய தலைவனாக ஹக்கீமுல்லா மெஹ்பூத் உள்ளான்.
அவனுக்கு அடுத்தபடியாக தலைமை பொறுப்பை ஏற்கவிருந்த விலி-யுர்-ரஹ்மான் இன்றைய அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தலிபான்களுக்கு ஏற்பட்ட கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதன் பிறகு தற்போதுதான் முதன்முறையாக அமெரிக்காவின் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment