புதிய ஹைப்பிட் மடிக்கணினி!
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
11.6 அங்குல அளவுடையதும் 1366 x 768 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ள இக்கணனியானது i3,i5 மற்றும் i7 Processor களை கொண்ட மூன்று பதிப்புக்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM இணைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 128GB Solid State Disk (SSD) இணையும் உள்ளடக்கியுள்ளன.
எனினும் பிரதான நினைவகத்தினை 8GB வரையும், சேமிப்பு நினைவகத்தினை 256GB வரையும் அதிகரித்துக்கொள்ள முடியும்.
மேலும் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட இக்கணனியின் விலையானது 799.99 அமெரிக்க டொலர்களாகும்.
0 comments :
Post a Comment