இந்திரத்ன தேரர் ஒரு மாட்டுக்காகவா உயிர்த்தியாகம் செய்தார்....? - மேதானந்த தேரர்
'இந்திரத்ன தேரர் தீக்குளித்து, நாட்டுக்கும் பௌத்த உயர்மதபீடத்திற்கும் இழுக்கினையே ஏற்படுத்தினார்' என தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிடுகிறார்.
அவ்வாறு தீக்குளிப்பதனால் எவ்விதத் தீர்வும் கிடைக்காது என்றும் தேரர் சுட்டிக் காட்டினார்.
'முழு உலகிற்கும் அன்பினை எடுத்தோதிய புத்தபிரானை நினைவுறுத்தும் நந்நாளன்று, தேர ரொருவர் வெசாக் தினத்தில் புனித தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து நாட்டுக்கும், பௌத்த மதபீடத்திற்கும் இழுக்கையே தேடித்தந்தார். இந்நாட்டிற்கு பண்டைய காலந்தொட்டு, மத மற்றும் சமூகப் பிரச்சினைகள் மேலெழும்போது அதற்கு பரிகாரமாக இருந்தவர்கள் இளம் பௌத்த பரம்பரையினரே. அவ்வாறான பௌத்த பரம்பரையினருக்கு இந்நிகழ்வானது தீயதொரு வழிகாட்டலையே வழங்கியிருக்கிறது. அதனால் இவ்வாறான முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்குமாறு இளம் பௌத்த பிக்குகளிடம் மிகவும் தாழ்வாகக் கேட்டுக்கொள்கிறேன்.
போதி மாதவன் தன்னுயிரை விலங்குகளின் உணவுக்காகத் தியாகம் செய்தார். அதுதான் நேரியது. இந்த இளம் துறவியின் தீக்குளிப்பு அவ்வாறனதென்று கருத முடியாது. இது புனித நடவடிக்கை எனக்கூறவியலாது. மாறாக இது தீக்குளிப்பின் மூலம் நிகழ்ந்துள்ளதொரு தற்கொலையே. சிலர் இதனை உயிர்த்தியாகம் எனக் கருதுகிறார்கள்...
அந்தத் துறவி யாருக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தார்? மாட்டுக்காகவா? மற்றையது தனது உயிரை அழித்துக்கொள்ளும்போது ஒருவருக்கு அவர்மீது வெறுப்பும், குரோதமும் ஏற்படுகிறது... மிருகங்களைப் பற்றி அனுதாபம் ஏற்படுவதில்லை.
தன்னுயிரை அழித்து மாடுகளைக் கொல்வதையோ, ஏனைய விலங்குகளைக் கொல்வதையோ நிறுத்த முடியாது. அதுபோல அதனை சட்டத்தினால் மட்டும் இல்லாமற் செய்யவும் முடியாது. அதனால் மக்களுக்கு அதுபற்றிய தெளிவுறுத்தலை ஏற்படுத்த வேண்டும். எல்லா பௌத்த பிக்குகளும் ஒன்றிணைந்து பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளை அழிப்பதை நிறுத் த முடியும் என்று நான் நினைக்கவில்லை.
இந்த பிக்கு எல்லை மீறியிருக்கிறார். இந்த பிக்குவின் தீய நடவடிக்கையை சிலர் அடிநாதமாய்க் கொண்டு பல்வேறு கருத்துக்களைக் கூறிவருவதைக் காண்கிறேன். அவற்றை எக்காரணம் கொண்டும் ஏற்கவியலாது. இதன்மூலம் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது' என்றும் மேதானந்த தேரர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
2 comments :
There are many ways to express your sorrows,feelings ,sympathy and happiness.The deceased Respected Bhikku was saddened by the cruelty
to the poor animals.His requests were turned to a blind eye.He may have emotinally saddened and the results was he burnt himself in a emtionally charged atmosphere.He is a real living memory in our hearts.
Non vegetarian Bhikkus never accept the remarkable act of the late Rev.Bhikku who sacrficed his life for a worthy purposes.This is an act of God an event caused by natural forces,beyond human control.
Post a Comment