Sunday, May 19, 2013

இரு ‘உளவாளிகளை’ தூக்கில் இட்டது ஈரான்! ஒருவர் சி.ஐ.ஏ, ஒருவர் மொசாத் (என்கிறார்கள்)!!

இரு உளவாளிகளுக்கு பொது இடத்தில் வைத்து தண்டனை வழங்கப்பட்டதாக, ஈரான் வானொலி இன்று அறிவித்தது. இந்த இருவரில் ஒருவர் சி.ஐ.ஏ.வின் உளவாளி என்றும், மற்றையவர், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தின் ஆள் என்றும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அரசு வானொலி அறிவிப்பின்படி, மொஹாமெட் ஹெய்தாரி என்பவர், மொசாத் உளவுத்துறைக்காக தகவல்களை ஆசகரித்து கொடுத்து வந்தார். அதற்காக அவருக்கு மொசாத் பணம் வழங்கியது.

மற்றொரு நபரான கௌரோஷ் அஹ்மதி என்பவர், சி.ஐ.ஏ. உளவாளியாக ஈரானுக்குள் செயல்பட்டார். உளவு வேலைகள் பார்த்ததற்காக இவருக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் சென்று வாழ ஏற்பாடு செய்வதாகவும், அங்கே வீடு ஒன்றை கொடுப்பதாகவும் சி.ஐ.ஏ. உறுதியளித்திருந்தது.

மேலே குறிப்பிட்டுள்ளது, ஈரானிய அரசு கூறும் தகவல். சி.ஐ.ஏ., அல்லது மொசாத் இது தொடர்பாக ஏதும் தெரிவிக்கவில்லை. பொது இடத்தில் தூக்கிலிடப்பட்ட இருவரும் எப்போது கைது செய்யப்பட்டார்கள்? எங்கே விசாரிக்கப்பட்டார்கள்? யார் தூக்கு தண்டனை வழங்கியது என்ற தகவல் ஏதுமில்லை.

இருவரும் பொது இடம் ஒன்றுக்கு அழைத்துவரப்பட்ட போட்டோ (மேலேயுள்ளது), கழுத்தில் கயிறு மாட்டப்படும் போட்டோ, ஏராளமானவர்கள் தூக்குத் தண்டனையை வேடிக்கை பார்க்கும் போட்டோ, மற்றும் இறந்தபின் கிரேன் ஒன்றின் மூலம் கீழே இறக்கப்படும் போட்டோ ஆகியவற்றை ஈரானிய அரசு நியூஸ் ஏஜென்சி ஐ.எஸ்.என்.ஏ. அனுப்பி வைத்துள்ளது

No comments:

Post a Comment