Friday, May 10, 2013

தமிழக முகாம்களில் இருக்கும் இலங்கை சிறுவர்களுக்கு பிறப்புச்சான்றிதழும் குடியுரிமையும்!

தமிழக முகாம்களில் இருக்கும் இலங்கை சிறுவர்களுக்கு பிறப்புச்சான்றிதழும் குடியுரிமை அத்தாட்சிப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ராமேஷ்வரம் விருது நகர் மற்றும் மதுவை ஆகிய முகாம்களிலுள்ள 350 இலங்கை சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த முகாம்களிலுள்ள 567 நபர்களுக்கு இலங்கை குடியுரிமையும் சென்னையிலுள்ள இந்தியாவுக்கான பதில் பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் ஓ.எல்.அமீர் சான்றிதழ்களை வழங்கி வைத்துள்ளார்.

தமிழகத்திலுள்ள முகாம்களில் பிறக்கும் இலங்கையர்களின் குழந்தைகளை பதிவு செய்யும் நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 9 முகாம்களை உள்ளடக்கும் விதத்தில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 4 வருடங்களில் மாத்திரம் இந்தியாவில் பிறந்த இலங்கை குழந்தைகள் 5 ஆயிரம் பேருக்கு பிறப்புச் சான்றிதழும் குடியுரிமை அத்தாட்சிப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளதாக சென்னையிலுள்ள இந்தியாவுக்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com