Sunday, May 5, 2013

பிறப்பில் கின்னஸ் சாதனை படைத்த இரட்டை குழந்தைகள்

அயர்லாந்தில் 87 நாட்கள் இடைவெளியில் பிறந்த மரியா ஜோன்ஸ் எல்லியாட் இரட்டை குழந்தைகள் கின்னஸ் சாதனை படைத்துள்ளன. அயர்லாந்தைச் சேர்ந்த மரியா ஜோன்ஸ் எல்லியாட் என்பவர் கர்ப்பிணியாக இருந்த பொழுது ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருடைய கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பிரசவ காலம் நிர்ணயிக்கப்பட்ட 4 மாதத்துக்கு முன்னரே மரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவ ருக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்தது. அதற்கு அமி என்று பெயரிட்டனர். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை அமியை இன்கு பேட்டரில் வைத்து பராமரித்து வந்தனர். அதேவேளையில் கருப்பையில் வளர்ந்த குழந்தையை பத்திரமாக காப்பாற்றி குறிப்பிட்ட காலத்தில் பிரசவிக்க செய்ய டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் முதல் குழந்தை பிறந்த 87 நாள் கழித்து தான் மற்றொரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கியாதி என்று பெயரிட்டனர். நீண்ட நாட்கள் இடைவெளியில் பிறந்த இந்த இரட்டை குழந்தைகள் தற்போது நலமாக உள்ளன. பொதுவாக, இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்து விடும். ஆனால் 87 நாட்கள் நீண்ட இடை வெளியில் இவைகள் பிறந்துள்ளன. அதேநேரம் உயிருடன் நலமாக உள்ளன. இது மருத்துவ உலகில் அதிசயமான ஆச்சரிய மானதாகக் கருதப்படுகிறது. மேலும் இடைவெளியில் பிறந்த இந்த இரட்டை குழந்தைகள் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com