Wednesday, May 15, 2013

பயங்கரவாதிகளின் முதல் இலக்கு உள்ளூராட்சி மன்றங்களாக இருந்தன! ஜனாதிபதி

பயங்கரவாதிகளின் செயற்பாட்டினால் யாழ். மேயரே முதலாவதாக பலியாகினார்!

புனித மகா போதிக்கு அண்மையில் 146 அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட போது அதைப்பற்றி பேசுவதற்கு ஒரு மனித உரிமைகள் இயக்கம் அன்றில்லை!

பயங்கரவாதிகளின் செயற்பாட்டினால் யாழ். மேயரே முதலாவதாக பலியாகினார் என்பதனை ஞாபகமூட்டுவதற்கு விரும்புகின்றேன் என்று உகண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய உள்ளூர் ஆட்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

"அபிவிருத்தியுடனான உள்ளூராட்சி அபிவிருத்தியில் உள்ளுராட்சிக்கு முக்கிய இடத்தை வழங்குதல்" என்ற தொனிப் பொருளில் அந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு, அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பயங்கரவாதிகளின் முதல் இலக்கு உள்ளூராட்சி மன்றங்களாக இருந்தன என்றும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உயிரூட்டுவதே அரசாங்கத்திற்கு முக்கியமானதாக இருந்தது எனவும், அதற்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

அத்துடன் ஜனநாயக விழுமியங்களை எடுத்தியம்புவதற்கு உள்ளூர் ஆட்சிமுறையையே நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். கி.மு.4 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகவே அபிவிருத்தி மக்களை நேரடியாக சென்றடைகின்றது. அது நடைமுறைச் சாத்தியமானதும் ஆக்கபூர்வமானதுமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எனது அபிப்பிராயத்தின் பிரகாரம் சமமான பங்களிப்பு சகலருக்கும் போய்ச்சேருவதை உறுதிப்படுத்தி இருப்பது அவசியமானதாகும் எனவும் இன்றைக்கு இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு இதேபோன்று ஒரு நாளில்தான் 146 அப்பாவி பொதுமக்கள் ஸ்ரீ மகா போதிக்கு அண்மையில் பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்டனர் என்றும் அதைப்பற்றி பேசுவதற்கு ஒரு மனித உரிமைகள் இயக்கம் அன்றில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், நிரந்தர சமாதானமும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இரண்டு தூண்களாக நின்று இலங்கையின் துரித பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு வித்திட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2 comments:

  1. The late Jaffna Mayor.Mr.Alfred Duraiyappah remain in our hearts,atleast he did something to the jaffna electorate,unfortunately his life ended under tragic circumstances.He would have made the city very colourful important and attractive,it was very unfortunate that we lost him.Thank you Hon president Mr.MR to remind him and praise him.

    ReplyDelete
  2. Sri lanka Makkalukku athirraha Anru t.t.t.e inru b.b.s. Intha budu bala sena wai arasu udanadiyaha verrodu alikke vandum. Aduththu yarum. Nan Ll.tt.e anro. Nan bb.bb.s anro yarum varamel sudduthallavandum.

    ReplyDelete