Thursday, May 2, 2013

அமைச்சுப் பதவியை விட எனக்கு நாடே பெரிது! வடக்கின் தேர்தலுக்கெதிராக எதையும் இழப்பேன்! - விமல் வீரவன்ச (படங்கள் இணைப்பு)

ஆயுத பலத்தால் வெல்ல முடியாதுபோன ஈழத்தை, மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக இந்தியா மேற்கத்தேயத்துடன் ஒன்றிணைந்து சூழ்ச்சிகள் மேற்கொண்டுவருவதாகவும், வடக்கில் நடைபெறும் எனக் குறிப்பிடப்படுகின்ற மாகாண சபைத் தேர்தலானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் தேசிய விடுதலை முன்னணி குறிப்பிடுகின்றது.

அம்முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச இந்தக் கருத்தை, நேற்று மாளிகாவத்தை பீ.டீ சிரிசேன விளையாட்டு்த்திடலில் இடம்பெற்ற அக்கட்சியின் மே தின ஊர்வலத்தின்போது குறிப்பிட்டார்.

உயிராக நினைத்த கட்சியான மக்கள் விடுதலை முன்னணியை தான் விட்டுவிட்டு வந்ததற்கான காரணம் அக்கட்சியின் சில செயற்பாடுகளினால் இந்நாடு பிளவுபடும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான். அவ்வாறு வரலாற்றுப் பக்கங்களில் தன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தாலும், தான் நாட்டுக்காக எதனையும் இழப்பது பெரிய விடயமல்ல எனக் குறிப்பிட்ட விமல் வீரவன்ச, அமைச்சுப் பதவியை விடவும் தான் நாட்டையே முதலில் நேசிக்கிறேன். அதனால், அமைச்சுப் பதவியை மிகவும் இலேசாகத்தான் பிடித்துக்கொண்டிருக்கிறேன்... என்றும் குறிப்பிட்டார்.

தாய்நாட்டை வெற்றியின்பால் கொண்டுசெல்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எந்தவித பயங்களுமின்றி தற்போது இருப்பதுபோல, இதற்குப் பிறகும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், அதனை வெகுவிரைவில் சாதித்துக் காட்டுமாறும் கேட்டுக்கொண்டார். அதாவது, பொருளாதாரத்தை நசுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளை வெளியேற்றுமாறும், வடக்கில் தேர்தல் நடாத்துவதற்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் மற்றும் இடங்களுக்குள்ள அதிகாரங்களை இல்லாமற் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வீரவன்சவின் முழுமையான பேச்சு வெகுவிரைவில் இலங்கை நெற்றில் இடம்பெறும்.. காத்திருங்கள்...!

(கேஎப்)

No comments:

Post a Comment