Wednesday, May 29, 2013

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை வரலாம்! ஆனால் விசாரணைகள் தொடர்பில் மூச்சுவிடக்கூடாது! தே. தே. இ.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங்கை வரலாம் வடக்கு கிழக்கிற்கு விஜயங்களை மேற்கொள்ளலாம். அதேபோல் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் கலந்துரை யாடல்களை நடத்தலாம். ஆனால் அரசியல் கருத்துக்களை பேசும் அதிகாரம் அவருக்பு இங்கு கிடையாது அத்துடன் விசாரணைகள் தொடர்பில் மூச்சுவிடக்கூடாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கா இந்தியா, உட்பட மேற்கத்தேய நாடுகள் இலங்கையில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன எனவும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா இலங்கைகெதிராக முன்வைத்த பிரேரணையில் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்திருந்தாகவும் அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தத்தை வழங்கவே ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங்கை வருகின்றார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான அழுத்தங்களுக்கு அடி பணியாது அரசாங்கம் தைரியத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும், 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், பிரிவினைவாத சட்டங்களை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்த முடியாது எனவும் வசந்த பண்டார தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com