Wednesday, May 22, 2013

வெள்ளைச் சீனியில் 'கெட்மியம்', சனம் பதற்றப்படத் தேவையில்லை... அவசரத் தீர்வு எடுக்கப்படும்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளைச் சீனியில் கெட்மியம் எனும் விஷ இரசாயனப் பொருள் உயர்மட்டத்தில் கலக்கப்பட்டுள்ளதென்பது, விவசாயத் திணைக்களத்தின் ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
தற்போது பரவலான முறையில் தாக்கிவரும் சிறுநீரக நோய்க்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமையம், அந்நோய்க்கு மூலகாரணம் கெட்மியம் எனும் நச்சுப் பொருள் எனத் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள சிறுநீரக நோயாளிகளின் சிறுநீர் பரிசோதனைகளிலிருந்து, சிறுநீரக நோய்க்குக் காரணம் பல்வேறுபட்ட கிருமிநாசினிகள் என்றும் அவர் தெரிவித்தார்.

கூடுதலாக இலங்கைக்குக் இறக்குமதிசெய்யப்படுகின்ற சீனி மற்றும் பருப்பு முதலியன ஆய்வுக்குட்படுத்தப்பட்டதென்றும், அதில் இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளைச் சீனியில் அதிக கெட்மிய விஷம் கலந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

சீனியிலுள்ள கெட்மியம் எந்த அளவு என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவருவதுடன், பருப்பு மற்றும் ஏனைய பொருட்களிலுள்ள இராசாயனப் பொருட்கள் விடயமாக அரசாங்கம் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டுவருவதாகவும், பொதுமக்கள் இவ்விடயத்தில் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  May 22, 2013 at 9:39 PM  

It is something shocking that Government`s negligience over the imported consumer items of the citizens.Health conscious consumers always want more information about the food they buy.it will boost the consumer confidence.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com