டாலர்களுக்காக வேலைசெய்வோரால் நாட்டுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாம்.
அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்திற்கு உயர்ந்தபட்ச நிவாரணம் வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், இதனை ஆயுதமாக பயன்படுத்தி, ஒரு சில சக்திகள் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதாக, தகவல்கள் தெரியவந்துள்ளன என்று சுயாதீனத் தொலைக்காட்சியின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்செய்தியில் , புலம்பெயர் தமிழர் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டு, டொலருக்கு அடிமைப்பட்டு, என்ஜிஓ வலையமைப்புகள், மீண்டும் நாட்டில் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக, தெரியவந்துள்ளது, எல்ரிரிஈ பயங்கரவாதத்தை தோற்கடித்து, நாட்டில் மீண்டும் நீடித்த அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தம் முடிவுறுத்தப்பட்டு, 4 ஆண்டுகாலத்திற்குள் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை சிரமத்திற்கு உட்படுததும் வகையிலேயே, இவ்வாறான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட வேதனையினால், நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு துணைபோகும் வகையில் புலம்பெயர் தமிழர்களின் டொலருக்கு அடிமைப்பட்டுள்ள சக்திகள் மக்களை திருப்பும் முயற்சியில், ஈடுபடுகின்றன.
ஜெனீவா மாநாட்டின்போதும், பிரதம நீதியரசருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்டரீதியான செயற்பாடுகளை கூட சவாலுக்குட்படுத்தி, அதனையும் ஆயுதமாக பயன்படுத்த ஒரு சிலர் முயற்சித்தனர். நாட்டை சர்வதேச ரீதியில் காட்டிக்கொடுக்கக்கூடிய ட்ரான்ஸ்பேரன்ஸ் இன்டர்நெசனல் சுதந்திர ஊடக அமைப்பு, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், கெபே உட்பட டொலரில் தங்கியுள்ள ஒரு சில அரச சார்ப்பற்ற அமைப்புகளும், புலம்பெயர் தமிழர் அமைப்புடன் தொடர்புகளை வைத்துள்ள விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனமும், நாட்டுக்கு எதிராக மக்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இவர்களின் எதிர்ப்புகள், அரசாங்கத்திற்கன்றி, நாட்டுக்கு எதிராகவே புரியப்படுவதை, மக்கள் தெளிவாக புரிந்துள்ளனர். நாட்டில் மீண்டும் யுத்த பீதியை உருவாக்க, இவர்கள் முயற்சிக்கின்றனர். ஒரு சில சர்வதேச சக்திகளுடன் இணைந்து நாட்டை அராஜகத்தில் இட்டுச்செல்லவும், சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்களுக்கான நிவாரணம் எனற் போர்வையில், இவர்கள் மேற்கொள்ளும் இந்த செயற்பாடுகள் குறித்து, அனைவரும் தெளிவான விளக்கம் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment