வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அதன்மூலம் இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவதன் மூலம் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு மும்மடங்காக அதிகரிப்பதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல காலங்களாக நீடிக்கின்ற நோய்கள், மற்றும் அதிக வலிகளை ஏற்படுத்துகின்ற நோய்கள் வரும் சந்தர்ப்பத்தில், பலர் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர் இதன்போது வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை விட அதிகளவான மாத்திரைகளை உற்கொள்வது உடலுக்கு பாரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களின்மூலம் நோவு அல்லது அதிகப்படியான வலிகள் ஏற்படும்போது உடனடியாக வைத்தியரை நாடி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்கு மாறான வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவு உட்கொள்வதன் காரணமாக வாழ்நாள் நோயாளிகளாக மாறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுமென குறித்த ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment