ஊடக சுதந்திரம் முழுமையாக காணப்பட்ட போதிலும் நாட்டிலுள்ள சிவில் சட்டத்தை மீறி ஊடகங்களுக்கு செயற்பட முடியாது எனவும், ஊடகங்களின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் முரண்பாடுகள் தோன்றியுள்ளது என தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர், நாடு, இனம், சமூகம் மற்றும் மதங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் ஊடகங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும், ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஊடக ஒழுக்க நெறி கோவையை தயாரிப்பதற்கான சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதுடன், ஊடக ஒழுக்க நெறி கோவை பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும் எனவும், ஒழுக்க கோவை தொடர்பில் குறித்த தரப்பினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் திருத்தங்களும் இறுதி சட்டமூல தயாரிப்பில் உள்வாங்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அண்மையில் பௌத்த தேரர் ஒருவர் தீமூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உள்ளுர் ஊடகமொன்றில் ஒளிபரப்பப்பட்டது எனவும், குறித்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளர் தற்கொலை செய்ய முயன்றவரை தடுக்காதது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment