Tuesday, May 7, 2013

பாராளுமன்றத்தில் பொய் சொன்னால் உறுபினர் பதவி போகலாம்

பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளி, ஒலிபரப்பு செய்வதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும். இங்கு பேசப்படும் சகல விடயங்களையும் நேரடியாகக் காணவும் கேட்கவும் மக்களுக்கு உரிமையுள்ளது. இதனூடாக எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து மக்களுக்கு அறிய முடியுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கம் சபாநாயகர் அலுவலகத்துடன் இணைந்து நடத்திய பாராளுமன்றத்திற்கும் ஊடகத்திற்குமிடையில் காத்திரமான நட்புறவை ஏற்படுத்துதல் என்ற தொனிப்பொருளிலான செயலமர்வு நேற்று பாராளுமன்ற முதலாவது குழு அறையில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறிப்பிட்டார்.

பாராளுமன்ற அமர்வுகள் நேரடியாக ஒலி, ஒளிபரப்பப்படவேண்டும் என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் குறிப்பிட்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய சபாநாயகர் நான் சபாநாயகராக நியமிக்கப்பட்ட நாள் முதல் பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு முயற்சி மேற்கொண்டேன். இது தொடர்பில் இந்திய லோக்சபா சபாநாயகருடனும் பேச்சு நடத்தினேன். அவரது கருத்து மற்றும் வழிகாட்டலுடன் இந்த நடவடிக்கையை எமது பாராளுமன்றத்தில் முன்னெடுக்க கவனம் செலுத்தப்பட்டது. லோக்சபாவுக்கென 24 மணி நேரமும் இயங்கும் தொலைக்காட்சி சேவை இருக்கிறது. இந்திய பாராளுமன்றம் இதற்கான செலவை செய்கிறது.

இலங்கையிலும் பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக காண்பிக்க முடியும். முதலில் வானொலியூடாக ஒலிபரப்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் பேசப்படும் சகல விடயங்களும் மக்களுக்கு செல்ல வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் உரை குறித்தும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். நிலையியற் கட்டளையின்படி எம்.பிக்களின் உரைகளை கத்தரித்து திருத்தம் செய்து ஊடகங்களுக்கு வழங்காது முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் எனக்குறிப்பிட்டார்.

எம்.பிக்களின் உரைகளை பிரசுரிக்கையில் சில எம்.பி.க்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சில எம்.பி.க்களின் உரைகள் பிரசுரிக்கப்படுவதில்லை. அவர்கள் உரையாற்றியதாக பெயர்கூட எழுதப்படுவதில்லை. சில எம்.பிக்கள் தாம் பிரபலமடைவதற்காகவும் தமது கட்சி கொள்கையை பிரபலப்படுத்தவும் நிலையியற் கட்டளைக்கு மாற்றமாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றனர். சிலவேளை நிலையியற் கட்டளையின் பிரகாரம் அதனை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களதும் உரைகளை நடுநிலையாகவும் நியாயமாகவும் பிரசுரிக்குமாறு கோருகிறேன் எனக்குறிப்பிட்டார்.

இங்கு கலந்து கொண்ட சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாபாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக காண்பிப்பது குறித்து கட்சித் தலைவர் கூட்டத்தில் பல தடவை ஆராயப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வுகள் நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். இதனூடாக நடுநிலையாக பாராளுமன்றத்தில் நடப்பவற்றை காண்பிக்க முடியும்.ஊடகம் ஒரு பக்கமும் அரசியல் வாதிகள் வேறு பக்கமும் இருந்து செயற்பட முடியாது. இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவது ஜனநாயகத்துக்கு முக்கியமாகும்.

சில நிறுவனங்களும் நபர்களும் ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். பொறுப்புடன் செய்திகளை வெளியிடுவது ஊடகங்களின் பொறுப்பாகும். ஊடகங்கள் கூறும் கோணத்திலன்றி மக்கள் வேறு கோணத்தில் சில விடயங்களை பார்ப்பதுண்டு. செய்தி பிரசுரிக்கையில் நிலையியற் கட்டளைகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றார்.

இங்கு உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற அமர்வுகள் நேரடியாக மக்களுக்கு காண்பிக்கப்படுவதன் மூலம் தமது மக்கள் பிரதிநிதிகள் குறித்து மக்களுக்கு அறியவும் குறைபாடுகளை தெரிந்து கொள்ளவும் முடியுமாகும். வீண் செலவுகளை குறித்து கணக்குக் குழுவுக்கு உரிய அதிகாரத்தை வழங்கி பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக காண்பிக்க முன்னுரிமை வழங்க முடியும். எம்.பி.க்கள் சண்டை பிடிப்பதை பார்த்து மக்களுக்கு யார் பொருத்தமான எம்.பியென தெரிந்து கொள்ளலாம்.

பரீட்சார்த்தமாகவேனும் நேரடி ஒலிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் மற்றும் நிலையியற் கட்டளை என்பவற்றுக்கு உட்பட்டே ஊடகங்களுக்கு செய்தி வெளியிடவேண்டியுள்ளது. சில நாடுகளில் பாராளுமன்ற அமர்வுகள் நேடிரயாக காண்பிக்கப்படுகிறது. மக்களுக்கு நாட்டின் அரசியல் முறை குறித்து வெறுப்புள்ளது.

நேரடி ஒளி ஒலிபரப்பு குறைத்து ஆராய சபாநாயகர் குழுவொன்றை நியமித்து ஆராய்ந்து வருகிறார். நேரடி ஒளி, ஒலிபரப்பு தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தி ஆராயப்பட வேண்டும் என்றார்.இந்த செயலமர்வில் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்தரகுமார் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, சட்டமா அதிபர் பாலித பெர்ணாந்து, பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல ஆகியோரும் உரையாற்றினர். பாராளுமன்ற திணைக்கள தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

5 comments:

  1. பொய் குற்றசாட்டுகளை அள்ளி வீசும் TNAகு நல்ல ஆப்படா.............. முதலில் பதவி பறி போகப் போவது lankasri ஸ்ரீதரனுக்கு தான் .

    ReplyDelete
  2. The voters especially the citizens of the country should know about the behaviourism of the representatives those who represent their constituencies.In public places big TV screens to be installed so it would be easy for the public to watch especially parliamentary events.

    ReplyDelete
  3. The camera cannot lie,but unfortunately lying has become a part in our lives.

    ReplyDelete
  4. All the politicians are number one liers. So, none of them will be the rest. the parliament will be shut down.

    ReplyDelete
  5. Atleast for certain hours let them
    be as "truth speakers" in order to satify the public.

    ReplyDelete