Saturday, May 11, 2013

என்னை குண்டுவீசி கொலை செய்ய முயன்றது மகிந்தரும், கோத்தபாயவுமே! - பொன்சேக்கா

2007 ஆம் ஆண்டு கொழும்லி புலி தற்கொலைக் குண்டுதாரிகளின் தாக்குதலுக்குள்ளானமை பற்றி முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்காவினால் வழங்கப்பட்டுள்ள செய்தியொன்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தயதாக சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளன.அதில், தம்மை குண்டுத் தாக்குதலின் மூலம் அழிப்பதற்கான செயல் ஜனாதிபதியினதும், பாதுகாப்புச் செயலாளரினதும் பார்வையுடனேயே நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தாக்குதல் தொடர்பாக இரகசியப் பொலிஸ் பிரிவின் சிரேட்ட பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் தகவல் பெறுதற் பொருட்டு, பொன்சேக்காவுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவர், மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கிடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் வருமாறு:

அதிகாரி: பொன்சேக்கா, உங்களைக் கொலை செய்ய முயன்ற தற்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய யாரேனும் ஒருவர் பற்றி உங்களுக்குச் சந்தேகம் உள்ளதா?

சரத் பொன்சேக்கா: ஆம்... ஆம்... இருக்கிறார். தெரிந்துகொள்ள வேண்டுமா?

அதிகாரி: எல்.ரீ.ரீ. இயக்கத்திலுள்ள யார் பற்றிச் சந்தேகிக்கிறீர்கள்?

சரத் பொன்சேக்கா: எல்.ரீ.ரீ.யினர் அக்காலத்தில் காடுகளில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர். நான் அவர்களை காட்டுக்குள் வளைத்துப் போட்டிருந்தேன்.

அதிகாரி: நீங்கள் இதுதொடர்பில் சந்தேகிப்பது பிரபாகரனையா அல்லது பொட்டுஅம்மானையா?

சரத் பொன்சேக்கா: நான் ஒருதடவை சொன்னேன்தானே... அவர்கள் காட்டுக்குள்தான் இருந்தார்கள் என்று...

அதிகாரி: அவ்வாறாயின் எல்.ரீ.ரீ.யில் உங்களுக்கு யார் மீது சந்தேகம் உள்ளது?

சரத் பொன்சேக்கா: எல்.ரீ.ரீ.யில் யார்மீதும் எனக்குச் சந்தேகம் கிடையாது. அதில் சந்தேகிக்கும் வண்ணம் யாருமில்லை. இதனைச் செய்தது ஜனாதிபதியும், கோத்தபாயவுமே.. யார் செய்த புண்ணியமோ நான் உயிர் பிழைத்தேன். இல்லாவிட்டால் இவர்கள் இன்னும் யுத்தம் செய்துகொண்டுதான் இருப்பார்கள். யுத்தம் செய்வது மட்டுமன்றி, யுத்தத்தை விற்றுச் சாப்பிடவும் செய்வார்கள். அவர்கள் அன்று பயந்திருந்தார்கள். ஏன் தெரியுமா? யுத்தம் முடிவடையும் என்று. யுத்தம் முடிவுக்கு வந்தது இவர்களுக்கு பெர நட்டமாகும்.

***சரத் பொன்சேக்காவின் இந்த விடயங்களைக் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரி வாயடைத்து நிற்கிறார்***

சரத் பொன்சேக்கா: இன்னும் என்னதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது?

அதிகாரி: இல்லவே இல்லை சார்... எனக்கு மேலிடத்திலிருந்து செய்தி வந்திருக்கிறது.. உங்களிடம் கருத்துக் கேட்கும்படி... அதுதான், உங்களுடன் தொடர்பை ஏற்படுத்தினேன். உங்களால் எங்களுக்கு கருத்துரைக்க முடியுமா?

சரத் பொன்சேக்கா: ஆம்.. முடியும். என்றாலும் நான் சொல்வதை அவ்வாறே எழுதிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் மாற்றங்கள் செய்யக்கூடாது. அதற்கு நீங்கள் விருப்பமாயின் எனது அலுவலகத்திற்கு யாரேனும் ஒருவரை அனுப்புங்கள்....

(கேஎப்)

1 comment: