Thursday, May 9, 2013

இலங்கை அரசாங்கம் சோமாலிய கடற்கொள்ளையர்கள் போலத்தான் இருக்கிறது... - மனோ கணேசன்

இந்த அரசாங்கம் பொதுமக்களின் இடங்களைக் கொள்ளையிடுவது, கைப்பற்றிக் கொள்வது சரியாக சோமாலிய கடற்கொள்ளையர்கள் போல் இருக்கின்றது. அத்துடன் 13 ஆவது யாப்புச் சீர்திருத்தத்தை மேற்கொள்வதாக உலகத்திற்கு பறைசாற்றிய இவ்வரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தாதுவிடின் மீண்டும் இந்நாட்டில் பிரிவினைவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடும்போது,

எச்சரிக்கை விடுவது பிரச்சினையா? கைது செய்யக்கூடியதொரு பயங்கரவாதச் செயலா? அஸாத் ஸாலிக்கும் இந்த எச்சரிக்கையே விடுக்கப்பட்டது. ஆயினும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது பாரியதொரு குற்றமாகும். இந்நாட்டில் நீதியில்லையென்றால், நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அளித்த வாக்குறுதியைச் சரிவரச் செய்யவில்லையென்றால், தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இல்லையென்றால், இந்நாட்டில் மீண்டும் பிரிவினைவாதமும் பயங்கரவாதமும் தோற்றம் பெறும் என்பதை நான் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும். அவ்வாறில்லை என்று யாரேனும் சொன்னால் அது அவர்களின் மடைமை என்று சொல்வேன்.

இது பெருங்கொள்ளையர்களின் அரசாங்கம். அவர்கள் சரியாக சோமாலிய கொள்ளையர்கள் போலிருக்கிறார்கள். நேற்று முன்தினம் புல்மூட்டை முஸ்லிம்களின் இடங்களைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

வடக்கிலுள்ள 6,300 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளைக் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மலைநாட்டு தோட்டத் தொழிலாளிகளுக்குச் சொந்தமான இடங்களை தங்கள் கட்சி உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக முயற்சிசெய்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறான விடயங்களை நாம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்போது அரசால் சகிக்கமுடியாமல் இருக்கிறது. அவர்களது தவறுகளை மூடிமறைக்க எம்மீது குற்றத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்...'

என்று குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

3 comments:

  1. Making always ugly comments about your country`s Government is not the way to bring solution to the problems .The Government is formed with the support of majority of the country.so,it is automatically a people`s Government.It has a good majority in the government,if the Government is on the wrong path defnitely the voters would teach them a good lesson during the next election.If you beleive in your justice system why not you submit your submissions at the courts where you may get a positive answer to your problems,failing in which the appeal court may give you a good answer.The voters are not like those days now they are clever,intelligent and sensitive.

    ReplyDelete
  2. By comparision with the politics of the advanced countries , at times they do oppose their respective governments and not always.
    it is certainly a duty of the opposition,but in our countries obstructing and behaving gross indecency,making indecent comments,
    is habit from top to bottom.we need to change this habit.Every after 5 years there will be change.The citizens will decide accordingly.

    ReplyDelete
  3. Past European History reveals the european countries also had "Sea Pirates"The wealth which was brought in ships from south asia
    were robbed in the high seas by the sea pirates,Somalia sea pirates just a new stroy,starvation of the country may the course of these happenings.

    ReplyDelete