Wednesday, May 8, 2013

முஸ்லிம் சமூகம் தம்மை சிறப்புக் குடிமக்கள் என்று நினைப்பது அவர்களின் தவறாகும்...! - ஓமல்பே சோபித்த தேரர்

நாங்கள் உண்மையில் இனவாதிகள்தாம்... மதவெறியர்கள் தாம்... இதில் சந்தேகம் கிடையாது. என ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (07) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது உரையாற்றுகையில்,

‘நாங்கள் இனவாதிகள்தாம்...அதில் சந்தேகம் கிடையாது... ஆயினும் இந்நாட்டில் இனவாத்த்தைக் கட்டியெழுப்பியவர்கள் நாங்கள் அல்ல... இனவாத - மதவாதப் பிரச்சினைகள் நாட்டில் மேலெழுந்தபோது நாங்களும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினோம்...’

‘எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எம்மில் தவறு உள்ளது என்று சந்தேகித்தால் உடனடியாக எங்களை அழைத்து விசாரணை செய்யலாம். சட்டம் சகலருக்கும் பொதுவானது... அஸாத் ஸாலி மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு குடிமகனையும் அழைத்து விசாரிக்கும் உரிமை அரசுக்கு உள்ளது.’

‘அஸாத் ஸாலி குற்றமற்றவர் என்றால் அவரால் நிச்சயம் வெளியே வர முடியும்...!’ இன்னொரு பக்கம் பார்த்தால், முஸ்லிம் சமூகம் தம்மை உயர்ந்த ஒரு இனமாக நினைத்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு அவர்கள் நினைப்பது அவர்களின் அறியாமையாகும். அவர்களின் தவறாகும்.

‘அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் மௌனம் சாதிக்கிறார்கள். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியோ ஏனைய கட்சிகளோ எதுவும் பேசாதிருக்கின்றன...இவ்விடயத்தில் மௌனித்திருந்தாலே வாக்குகளை வெல்லாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. அதுபற்றி நாங்கள் பேசப்புகுந்தால் நெருப்பைக் கக்குகிறார்கள்’

ஆசியாவின் அதிசயமாக இந்நாட்டை மாற்ற முடியும் எனக்கூறுகிறார்கள். அதில் எமக்குச் சந்தேகம்தான் உள்ளது. ஏனென்றால், ஏற்கனவே இது குற்றங்களின் குகையாகிவிட்டது.’ என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

3 comments :

Unknown May 8, 2013 at 7:12 PM  

Neengal ippadi sollium arasangam ungalai viddu vaiththirunthal. Onril ungalai muddalkel anru ninathuerukkevandum illaviddal ranuvam muddal

Anonymous ,  May 8, 2013 at 7:13 PM  

அஸாத் ஸாலி மட்டுமல்ல, ‘நாங்கள் இனவாதிகள்தாம்...அதில் சந்தேகம் கிடையாது...என்று வெளிபடையாக கூறும் இவர்களை
உடனடியாக அழைத்து விசாரணை செய்யலாம்.ஆனால் அது நடக்காது.
இதுவே மகிந்தரின் சித்தனை ஆட்சி.
முதுகெலும்பு இருக்கும் அரசியல் வாதிகள் தட்டிக்கேட்க முன் வரவேண்டும்.
Hakkeem

Arya ,  May 9, 2013 at 1:48 PM  

இஸ்ரேலின் மாதிரியை இலங்கை பின் பற்ற வேண்டும் அல்லது இலங்கைக்கு பெரும் ஆபத்து விளையும் , ஏற்கனவே தமிழ் நாட்டில் இலங்கைக்கு எதிராக செயல் படுபவர்களுக்கு அமெரிக்கா பணத்தை வாரி இறைகின்றது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com