Saturday, May 25, 2013

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் காலமானார்!

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் தனது 91 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார்.

எனினும் இன்று சனிக்கிழமை மாலை அவர் தனது வீட்டில் காலமானார்.

தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பாடல்களை பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

கடந்த 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவர் 1950 ஆம் ஆண்டுகிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார்.

மேலும் 2003 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருந்தை பெற்ற சௌந்தரராஜன் இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சில பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com