Monday, May 20, 2013

அமெரிக்காவில் இலங்கை மாணவர் சாதனை!

அமெரிக்காவில் இடம்பெற்ற உலக புதிய தயாரிப்புகளுக்கான போட்டியில் வெற்றிபெற்ற மிஹிந்தலை மகாவித்தியாலயத்தின் மாணவர், இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை சந்திக்கவுள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனா பிராந்தியத்தில் சர்வதேச போட்டியாளர்கள் பங்குபற்றிய புதிய தயாரிப்புகளுக்கான போட்டி இடம்பெற்றது. தொழில்நுட்ப மற்றும் இயந்திர பொறியியல் கனிஷ்ட பிரிவில் முதலாம் இடத்தை குறித்த மாணவர் பெற்றுக்கொண்டார்.

மிஹிந்த மகாவித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்விகற்கும் சித்ரானந்த கபுகே எனும் மாணவரே போட்டியில் வெற்றிபெற்றுள்ளார். இன்று காலை நாடு திரும்பிய குறித்த மாணவர், ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். குறித்த மாணவரால் தயாரிக்கப்பட்ட இயந்திரம் இதுவரை உலகில் தயாரிக்கப்படாத புதிய படைப்பாக அடையாளப்படுத்தப்படவுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற இவ்வாறான ஒரு போட்டியில் இலங்கையர் ஒருவர் வெற்றிபெற்றுள்ளமை நாட்டுக்கு பெருமை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment