பிரான்ஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்!
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் தெய்வாதீனமாக நடிகர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று பிரெஞ்ச் தொலைக்காட்சி ஆஸ்கார் விருது வென்ற ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் வால்ட்ஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு நடிகரான டேனியல் அடேல் ஆகியோரிடம் பேட்டி எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
இந்த பேட்டிக்காக கடற்கரையில் ஒரு பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு பேட்டிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. பேட்டி நடாத்தப்பட்ட இடத்திலும் ஏராளமான பார்வையாளர்கள் நின்றிருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு நபர் திடீரென எழுந்து வானை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கி சத்தம் கேட்டவுடன், நடிகர்கள் இருவரும் பாதுகாப்பு தேடி பாய்ந்து ஓடினர். இதற்கிடையே நடிகர்களுடன் வந்திருந்த தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் பாய்ந்து சென்று, துப்பாக்கியால் சுட்ட நபரை தரையில் வீழ்த்தினர். அந்த நபரை சோதனையிட்டபோது கையில் வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து கூட்டத்தினரை உடனடியாக அங்கிருந்து ஓடிச் செல்லுமாறு பாதுகாவலர்கள் கேட்டுக்கொண்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் சந்தேக நபரை சேதனை செய்தபோது அந்த நபரிடம் இருந்தது போலி வெடிகுண்டு என தெரியவந்தது. குறித்த நபர், மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலீஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment