என் தந்தை புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்ததன் காரணம் தெரியாது கொக்கரிக்கிறார்கள்....! கூட்டணியை பிரிப்பதற்கே அவ்வாறு செய்தார்! - சஜித்
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதன் காரணம் யாதெனில், எல்.ரீ.ரீ. ஈ. தலைவர் தலைமைத்துவத்திற்கு எதிராகச் செயற்படுவதற்கேயாகும் என சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேதாச விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்பதையும் கிழக்கில் பொலிஸ் அதிகாரிகளை எல்.ரீ.ரீ. இனர் கொலை செய்ததைதையும் மகிந்த அரசாங்கம், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாளர்களின் காட்டிக் கொடுப்பு என்று வர்ணிக்கின்றது.
இந்த இரு விடயங்களையும் முழுமையாக நிராகரிக்கும் பிரேமதாசவின் மைந்தன் சஜித் குறிப்பிடும்போது, பிரேமதாச எல்.ரீ.ரீ.ஈ யினர் பற்றிய கணிப்பீடு தவறியதனாலேயே பொலிஸார் கொலைசெய்யப்பட்டனர் என்று குறிப்பிடுகிறார்.
'அரசாங்கத்திலும் விடுதலைப் புலிகளிடையேயும் சில ஒருமைப்பாடுகள், புரிந்துணர்வுகள் மேலெழுகின்ற ஒருகாலகட்டத்திலேயே யாரும் எதிர்பாராத வண்ணம் இந்த அசமந்த போக்கு நிகழ்ந்தது' எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்திய இராணுவம் வடக்கில் தொடர்ந்து இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச, அவ் இராணுவத்தினருடன் யுத்தம் செய்துகொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கினார் என மேஜர் ஜெனர் டென்ஸில் கொப்பேகடுவவின் கொலையை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
2002 இல் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்ததாக மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சி மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
அதற்கு பதலளிக்கும்வகையில் சஜித் பிரேமதாச குறிப்பிடும்போது, 'எப்படியான குறைபாடுகள் இருந்த போதும்' கிழக்கின் விடுதலைப் புலித் தலைமை, விடுதலைப் புலித் தலைவரிடமிருந்து விலகிச் செல்வதற்கு 'முக்கிய காரணி' யாக அமைந்தது இந்த போர் நிறுத்த உடன்படிக்கையே எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
1 comments :
Every action has a opposite and equal reaction:In a democratic country democratic ways are the best to meet every difficulty or problem,rather than making use of the short cut.
Post a Comment