Saturday, May 4, 2013

ரணிலின் யாழ் பயணம். கையை பிசையும் தமிழ் தலைமைகள்.

கடந்த வாரம் யாழ் பாணத்திற்கு ரணில் மற்றும் அவரது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் படையெடுத்திருந்தனர். இவர்கள் அங்கு யாழிலுள்ள தமிழ் தலைமைகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்திருந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தம்மிடையேயுள்ள பிரச்சினைகளை பேசி சுமூகமாக தீர்த்துக்கொள்ளவேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சகல தரப்புக்களிடமும் கேட்டுக்கொண்டிருந்தாக வெளிவந்திருந்த செய்திகளின் பிரதானமான செய்தியாக அமைந்திருந்தது.

ஆனால் பத்திரிகைச் செய்திகள் அவ்வாறு வெளிவந்திருந்தாலும் நிஜமாக நடைபெற்ற விளையாட்டுக்கள் யாழிலுள்ள சகல அரசியல் கட்சிகளின் தலைமைகளையும் ஓர் ஆட்டம் ஆட்டியுள்ளது.

ரணில் இந்த விஜயத்தின்போது பல்வேறு இரகசியச் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். அச்சந்திப்புக்கள் கட்சிகளின் இரண்டாம் மூன்றாம் தலைமைகளுடனான ரகசிய சந்திப்புக்களாகவும் பெட்டிமாறும் சித்துவிளையாட்டுக்களாகவும் அமைந்திருந்துள்ளது.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய பங்குகளில் உள்ள பலரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பெட்டி மாறல்களாகவே அவை அமைந்துள்ளது.

இவ்வாறு பெட்டியை பெற்றுக்கொண்டவர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை பத்திரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ரணிலை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்ற தமிழ் தலைமைகள் தற்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தங்களுக்குள் முணு முணுப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. Be sure,we have to doubt that we haven`t got any proper leaders with courage,wisdom,humility and sicereity to act on behalf of us.As there is no one, we are compelled to act wisely and cast our precious vote
    to the very suitable candidates who can do a sacrifising job to our society,our soil,our children, etc etc..Defnitely we have to change the change the same very old worthless political flavour.

    ReplyDelete
  2. Not that they are fallen into the trap of Mr.R.but opportunists always change their policies accordingly
    what opportunity they have in which they can be benefited

    ReplyDelete