Thursday, May 16, 2013

கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறை தாமும் செய்ய விரும்பவில்லை! பாதுகாப்புச் செயலாளர்

யாழ் குடாநாடு மற்றும் வன்னியில் இராணுவத்தினரின் பிரசன்னமானது மக்களின் பாதுகாப்பை முன்னிலைப் படுத்தியே காணப்படுகின்றது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அத்துடன் படையினர் நிலைநிறுத்தப்படும் நடவடிக்கையானது இன்றியமையாதது எனவும், சில தரப்பினர் இதனை தங்கள் அரசியல் தேவைகளுக்காகப் இவ்விடயத்தை பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதனால் பாரிய பின்விளைவுகள் ஏற்பட்டதாகவும், அதே தவறை தாமும் செய்ய விரும்பவில்லை எனவும் சுட்டிக்காட்டிய அவர் வடக்கிலும் வன்னியிலும் இராணுவத்தினரின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டுள்ளது எனவும் யுத்தம் இடம்பெற்ற காலத்துடன் ஒப்பீடு செய்யும் போது பாரியளவில் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்கக் கூடிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com