சட்டவிரோதமாக சவுதியில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள்!
சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளி நாட்டவருக்கு அந்நாட்டு அரசாங்கம் பொது மன்னிப்பு காலத்தை பிரகடனப்படுத்தியுள்ளது இதனையடுத்து அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் உடனடியாக இலங்கை வருவதற்காக தற்காலிக கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக சவுதி இலங்கை தூதரகம் 24 மணித்தியாலமும் சேவையாற்றி வருவதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை இலங்கை தூதரகத்தினால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தாயகம் திரும்பினர். ஏனையோரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment