Thursday, May 30, 2013

யாழ்ப்பாண தமிழருக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது!

ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது நேற்று காலைவழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதை இம்முறை 11 பேர் பெற்ற போதும் அவர்களிகளுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளதுடன் “சிவானந்தன் ஆய்வு மையம்” என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாப நோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

இவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளதீகவியற்றுறையினரும் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் இவர் யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டதுடன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. யாழ்ப்பாண தமிழனுக்கு வெள்ளைமாளிகை விருது தலைப்பு

    இதுவே மட்டகளப்பு அல்லது திருகோணமலை தமிழனாக இருந்தால்

    ஈழத்தமிழனுக்கு வெள்ளைமாளிகை விருது

    இதற்காகவெனும் தமிழீழம் வேண்டும் ஐயா

    ReplyDelete
  2. First of all, He is a Sri Lankan Tamil. The further racial divisions are useless and narrow minded.
    There should be a limit to our traditional dirty politics.

    ReplyDelete
  3. ஒரு இலங்கையில் பிறந்தவருக்கு அதுவும் இலங்கையில் கல்வி கற்றவருக்கு விருது கிடைத்ததாகவே இதை கருத முடியும், புலி ஊதுகுழல்களே இப்படியான தலைப்புகளை போட்டு மக்களை மந்தைகளாக வைத்திருப்பார் இலங்கைநெட்ம் , இப்படி செய்வது வருந்தததக்கது.

    ReplyDelete