Tuesday, May 7, 2013

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியதற்காக நீலக்கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த்தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல் வாவின் 36 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை விசாரணை நடத்த வேண்டும் என்று தற்போது ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளது மனித உரிமை விடயத்திலே இருதரப்பினர்களும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கெதிராக குற்றம் புரிந்துள்ளார்கள். இது விசாரிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நாங்கள் ஆதரிக்கின்றோம். அவ்வாறான விசாரணை இருதரப்பினரையும் உட்படுத்தி இந்த விசாரணை இடம்பெற வேண்டும்.

சர்வதேச சட்டத்திலே மிகப் பாரிய குற்றமான இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதையும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கம் துன்புறுத்தல் செய்தது என்பதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு முரணாக எங்களுடைய பூர்வீக நிலம் தற்போது சுவீகரிக்கப்படுகின்றன என்பதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதேநேரம் எங்களுடைய தரப்பிலிருந்தும் தவறுகள் இடம்பெற்றுள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடைய மண்ணிலிருந்து இன சுத்திகரிப்பை நாங்கள் செய்திருக்கிறோம். தமிழர் தரப்பிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது இந்த கசப்பான உண்மை. நாங்களும் இனச் சுத்திகரிப்பிற்குரிய குற்றவாளிகள் என்பதை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் எமக்கெதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார்.

4 comments:

  1. இப்போது தான் இவர்களுக்கு எல்லாம் ஞானம் பிறந்துள்ளது.
    நாங்கள் எங்கள் ஓட்டைகளை, புலிகளின் அடாவடித்தனமான சேட்டைகளை மறைத்துக் கொண்டு, எப்படி அரசாங்கத்தையும், இராணுவத்தையும் மட்டும் குறை சொல்லி, கொண்டு சர்வதேச நீதி விசாரணைகளை எதிர்பார்த்திருக்க முடியும்? முதலில் நாம் செய்த தவறுகளை உணர்ந்து, நேர்மை, நீதியாகாக எல்லோரும் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. Late Mr.SJV being described as the father of the tamil nation,while looking at his long standing political publicity stunts he hasn`t achieved anything in his long political career.He was the course for the disunification of the entire nation.Secondly shedding tears for the muslim society who were wiped out from jaffna witihn a certain hours.After doing all the dirty things to a society,now you regret terribly for what you have to the muslim society.The saddest memories cannot be erased out from our minds.The saddest events always remain in our minds.

    ReplyDelete
  3. இவர் சொல்லுவதின் படி பார்த்தால் புலிகளும் புலித்தலைவன் பிரபாகரனும் முட்டாள்கள் என பொருள் படுகின்றது , அவர்களை ஆதரித்த TNA அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமா ?

    ReplyDelete
  4. They(TNA) need to receive an open stage apology from the displaced muslims,for the crime they have committed.Just making pathetic comments are utterly useless.

    ReplyDelete