Wednesday, May 22, 2013

புதிய அதிகாரப்பகிர்வை கொண்டுவர ஐ.தே.க விருப்பம்!

அதிகாரப்பகிர்வு தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றுவது தொடர்பில் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும் அதற்கு பதிலாக மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய அதிகாரப்பகிர்வு முறையை கொண்டுவர விரும்புவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று தெரிவித்துள்ளது.

இருப்பினும் இப்போதைக்கு 13ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான .அதிகாரப்பகிர்வு கட்சியின் கொள்கையாக இருக்கும் எனவும் ஐ.தே.க. கூறியுள்ளது.

மக்கள் வெளியிட்ட கருத்தை தனது கட்சி கவனத்தில் எடுத்து அதன் அடிப்படையில் அதிகாரப்பரவலுக்கான திட்டத்தை முன்வைக்கும் என ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

'இதை நாம் மக்களிடம் விடுவோம்' எனவும் அவர் கூறினார்.

வண. மதுலுவெவ சோபித தேரர் முன்வைத்த வெஸ்ட் மினிஸ்டர் முறையை மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்பட்ட அரசியல் சாராத நிறைவேற்று ஜனாதிபதி முறைமை என்ற பல தெரிவுகளை கட்சி ஆராய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மே மாதம் 29ஆம் திகதி தனது கட்சி அதன் புதிய அரசியலமைப்பை வெளியிடும். பின்னர் கட்சிகள், சமூக குழுக்களிடமிருந்து கருத்துக்களை பெற்று அதன் அடிப்படையில் இறுதி அரசியலமைப்பை இன்னும் 6 மாதங்களில் வெளியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment