Thursday, May 16, 2013

இந்திய உயர்ஸ்தானிகருக்கு ரிசாத் பதியுதீனின் விசேட பிரியாவிடை!

இலங்கையில் தமது பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் இந்தியாவின் ஆசிய பிராந்தியத்துக்கான செயலாளராக நியமனம் பெற்றுச் செல்லும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தா அவர்களுக்கு நேற்று இரவு கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் விசேட பிரியாவிடை வைபவமொன்றை நடத்தினார்.

அசோக் கே.காந்தா 2009 ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்றார். இலங்கையில் பதவியினை ஏற்பதற்கு முன்னர் மலேசியாவிற்கான இந்திய உயர் ஸ்தானிகராக 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2009 ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார்.

திரு.அசோக் கே.காந்தா அவர்கள் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி பிறந்தார். அதன் பின்னர் இந்தியா அரச வங்கியின் பதவி நிலை அதிகாரியாக பணியாற்றிய அவர், 1977 ஆம் ஆண்டு இந்திய வெளிநாட்டு சேவை துறையில் ஈடுபட்டதுடன், 1979 முதல் 1981 வரை சீன மொழி கற்கையினை சிங்கப்பூரில் அமைந்துள்ள சீன நன்யாங் பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார்.

அசோக் கே.காந்தா அவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை உபசாரத்தில் கருத்துரைத்த அமைச்ச் றிசாத் பதியூதீன்.. இலங்கையில் போர் காலத்திலும், அதனை தொடரந்து வந்த காலங்களிலும், இலங்கை மக்களுக்கு குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உதவி செய்யும் ஒருவராக அசோக் கே.காந்தா இருந்துள்ளதாகவும், அவரது சேவை காலத்தில் இந்தியா-இலங்கை உறவு பல் துறையிலும் நன்மையடைந்துள்ளதாகவும் இங்கு குறிப்பிட்டார்.

இந்த பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர்கள், மற்றும் பன்னாட்டு தூதுவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com